பால் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இயற்கை உணவாகும். குழந்தை பருவம் முதல் முதிய வயது வரை, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பால் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை “முழுமையான உணவு” என்று அழைப்பதற்கு காரணம், உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இதில் இருப்பதே ஆகும்.
இந்த கட்டுரையில் பால் என்றால் என்ன, அதன் ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் பாலின் முக்கியமான நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பால்
பால் என்பது பாலூட்டும் விலங்குகள் தங்களின் குட்டிகளுக்கு உணவாக உருவாக்கும் இயற்கையான வெள்ளை திரவமாகும். இதில் பசும்பால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
பாலில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இது உடல் வளர்ச்சிக்கும், பழுது சரிசெய்யவும் உதவுகிறது.
பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு
நமது இந்திய தேசமானது, உலகின் பால் உற்பத்தியில் கிட்டத்தட்ட சுமார் 24 சதவிகிதத்தை உற்பத்தி செய்து, உலகின் பால் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கிறது.
இந்திய தேசத்தின் கடந்த ஆண்டு மொத்த பால் உற்பத்தி ஆனது, சுமார் 248 மில்லியன் டன் ஆகும். இது 2023-2024-ஐ விட சுமார் 3.7% அதிகம்.
இதில் உத்தரபிரதேச மாநிலம் சுமார் 16 சதவிகிதம் உற்பத்தி செய்து, இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது.
பாலில் உள்ள சத்துக்கள்
பாலானது ஊட்டச்சத்து நிறைந்த, உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய ஒரு உணவு பொருளாகும். இந்த பாலில் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் இயற்கையான கால்சியம், பொட்டாசியம், லாக்டின் (புரதம்), மற்றும் லாக்டோஸ் (இரட்டைச்சர்க்கரை) ஆகியவை நிறைந்துள்ளன.
மேலும், இவற்றில் கோலின், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், துத்தநாகம், செம்பு, மாங்கனீசு,செலீனியம்,வைட்டமின் பி6, பி12, ஏ, சி, டி, மற்றும் கே உள்ளன.
அத்துடன் பலவகையான அமினோ அமிலங்களும் கலந்துள்ளன. இதுபோல பாலில் அதிகப்படியான பலவகைப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துதுள்ளன.
இந்த காரணத்தால் பாலானது இயற்கையாகவே இனிப்பு சுவையுடையதாக உள்ளது. பாலில் இயற்கையான கொழுப்புடன், அந்த கொழுப்பை கரைக்கக்கூடிய உயிர்ச்சத்துக்களும், இயற்கையாகவே அமைந்துள்ளன.
இந்த பாலில் உள்ள புரதமானது கேசின் என அழைக்கப்படும் ஒரு புரதவகையை சேர்ந்தது.
மேற்குறியவை மட்டுமல்லாது, கறக்கப்பட்ட பாலில் இரத்தவெள்ளையணுக்கள், பால்மடிச்சுரப்பி செல்கள், பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன.
இவையனைத்தும் நமது உடலுக்கு எண்ணற்ற சக்தியினை அளித்து, ஆரோக்கியமாக வாழ துணைப்புரிகிறது.
பால் உற்பத்தி பொருட்கள்
பெரும்பாலும் பாலிலிருந்து பெறப்படும் பொருட்களை பால் பொருட்கள் என அழைக்கிறோம்.
இந்த பொருட்கள் பெரும்பாலும் பாலை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.
உதாரணமாக தயிர், வெண்ணெய், மோர், நெய், பால்கோவா, பனீர் மற்றும் யோக்கட் கிடைக்கின்றன.
பாலின் நன்மைகள்
பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவதால் நமக்கு இயற்கையாகவே ஆரோக்கியமான உடலை பெறமுடியும் என அனைவருக்கும் தெரியும்.
பால் தொடர்ந்து பருகி வருவதால், நமது சருமம் மிகுந்த பலப்பலப்புடன் இருக்கும்.
பால் பருகுவதால் இருதயம் சார்ந்த நோய்கள் நம்மை நெருங்குவதில்லை. பாலானது இதயநோய்கள் இடமிருந்து நம்மை காக்கிறது.
பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம் நமது எலும்பை வலுப்பெற செய்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உடல் எடையை குறைப்பதற்கும் பால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பால் தர நிர்ணயம்
பொதுவாக பாலை அதிலுள்ள கொழுப்பு, தூய்மை, நுண்ணுயிர் நீக்கம், திரியும் காலம் மற்றும் நீரின் அளவை வைத்து வகைப்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படுகிறது.
பால் பருக்குவதற்கான உகந்த நேரம்
பால் பருகுவதால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எந்த நேரத்தில் பருக வேண்டும் என்பது முக்கியம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினந்தோறும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் பால் பருகுவது நல்லது. ஆனால், நமது ஆயுர்வேதத்தில் இரவு நேரத்தில் பால் அருந்துவது மிக நல்லது என கூறப்பட்டுள்ளது.
நாம் காலையில் பால் அருந்தும் பொழுது அன்றைக்கு தேவையான புரதமானது, நமக்கு முழுவதும் கிடைத்துவிடுகின்றது.
உடல் தசைகளை பலப்படுத்த நினைப்பவர்கள், அதிகாலையில் பால் அருந்தி விட்டு, பின்னர் இரவு உணவுக்கு பின்னர் பாலை அருந்த வேண்டும். அப்படி அருந்துவதே சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள்.
இரவு தூங்க செல்லும் முன்பு, மிதமான சூட்டில் பால் அருந்தி விட்டு படுப்பது நல்லது.
அப்படி அருந்துவதால் நமது மனமானது நல்ல அமைதியை பெறுகிறது, இதனால் நல்ல உறக்கமும் கிடைக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், இரவு நேரங்களில் அதிகமான அளவு பால் அருந்துவது கூடாது.
அப்படி அருந்தினால் அவர்களின் உடலில் அதிகப்படியான கொழுப்பை அதிகரிக்க செய்யும். அதுமட்டுமில்லாமல் சிலருக்கு செரிமான பிரச்சனையும் வரலாம்.
நினைவில் கொள்ளுங்கள்
பால் என்பது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை உணவாகும். சரியான அளவில் மற்றும் சரியான நேரத்தில் பால் குடிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
0 Comments