Ticker

6/recent/ticker-posts

பலாக்காயின் நன்மைகள் | ஆரோக்கியம்

பலா
பலா

Benefits of Jackfruit | Health

நமது பாரம்பரியத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும், முக்கனிகளில் ஒன்றான பலாவை பற்றிய சில தகவல்களும், அதன் அற்புதமான மருத்துவக்குணங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.


பொருளடக்கம்

  • பலா
  • பலாக்காயும், வங்கதேசமும்
  • இன்றைய மக்களும், பலாக்காயும்
  • பலாக்காயில் உள்ள சத்துக்கள்
  • பலாக்காயின் மருத்துவக்குணங்கள்
  

பலா

நமது நாட்டில் முக்கனி என சிறப்பிக்கப்படும் கனிகளில், இந்த பலாக்காய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

நமது முன்னோர்கள் இந்த பலாப்பழத்தை முக்கனியில் வைத்து சிறப்பித்துள்ளனர்.

பலாப்பழத்தின் சுவையை நினைத்தாலே இனிக்கும். அந்த அளவிற்கு திகட்டாத தித்திக்கும் தன்மையுடையது.

பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் உள்ளே அவ்வளவு இனிப்பான சுவையுடையது.

பலாக்காய்
பலாக்காய்

நம்நாட்டு மக்கள் சிலரை விமர்ச்சிக்க பார்ப்பதற்கு, பலாப்பழத்தை போல கரடுமுரடாக இருந்தாலும், உள்ளே நல்லகுணத்தை கொண்டுள்ளார் எனக் கூறுவார்.

இந்த பலா ஒரு மரவகையை சார்ந்தது. இந்த பலாமரத்தின் பயன்களை நம் முன்னோர்கள் ஆதிகாலந்தொட்டே பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது வெப்ப நாடுகளில் நன்றாக வளரும். நமது நாட்டில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக விளைகிறது.

பலாப்பழத்தை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். இந்த பலாப்பழத்தின் பிஞ்சு மற்றும் இளம் காய்கள் சிறந்த காய்கறி உணவாக பயன்படுகிறது.

இதற்கு காரணமும், இதன் சுவை தான். இந்த பிஞ்சுகளை பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும்.


பலாக்காயும், வங்கதேசமும்

நமது நாட்டிலிருந்து பிரிந்து, இன்று ஒரு தனிநாடாக திகழும் வங்கதேசத்தில், ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டது.

அங்கு வாழ்ந்த மக்கள் இந்த பலாக்காய் உணவுகளை உண்டு, ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்த்துக்கொண்டனர்.

இந்த காரணத்தால் அந்நாட்டு மக்கள் இதனை "ஏழைகளின் காய்" என்று கொண்டாடுகின்றனர்.

பலாக்காய்
பலாக்காய்

இன்றைய மக்களும், பலாக்காயும்

இன்று அதிகமாக, இதன் காய்களை சமைத்து உண்ணாமல் இருக்கலாம்.

ஆனால் ஒருகாலத்தில் இந்த பலாக்காயை கொண்டு சமைக்கப்படும் உணவுகள், அரிசியை கொண்டு சமைக்கப்படும் உணவிற்கு இணையான இருந்தது.

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில், இதை வெட்டி சமைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

அதுமட்டுமல்லாமல், பருவ காலங்களை தவிர்த்து மற்றக்காலங்களில் கிடைக்காத காரணத்தாலும் இதை சமைக்க அனைவரும் சோம்பல் கொள்கின்றனர்.

இன்றும் இலங்கையில், இந்த பலாக்காய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இந்த பலாக்காய், அரிசிக்கு நிகரான மாவுச்சத்தை கொண்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் பலாமரத்தை "அரிசி மரம்" என்று அழைக்கின்றனர்.

பலாக்காயையோ அல்லது பழத்தையோ வெட்டும் முன்பு கத்திகளிலும், கைகளிலும் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ள பலாக்காய் உடைய பாலானது ஒட்டாது.

நமது பக்கத்துக்கு மாநிலமான கேரளத்தில், இந்த பலாக்காய் உணவுகளை கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அளவிற்கு பெருமையும் மகத்துவமும் கொண்ட பலாக்காய் உணவுகள் தற்சமயத்தில் அதிகமாக பயன்படுத்தாமல் போனதற்கு காரணம் அண்டை நாட்டவர்களின் வருகையால் என்றால் நம்புவீர்களா?. ஆம்! உண்மை தான்.

போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்திற்கு முன்பு வரை, இந்த பலாக்காய் உணவுகள், அரிசி உணவுகளுக்கு இணையாகவே இருந்து வந்தது.

அவர்கள் வருகைக்கு பிறகு மரவள்ளி கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், பலாக்காயின் பயன்பாடுகள் குறைந்து போயின.

பலாக்காய்
பலாக்காய்

பலாக்காயில் உள்ள சத்துக்கள்

பலாக்காயில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்ல பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

      • வைட்டமின் ஏ, பி, சி,
      • இரும்பு சத்து,
      • பொட்டாசியம்,
      • கால்சியம்,
      • புரதம்,
      • உயர்தரமான மாவுச்சத்து,
      • நார்ச்சத்து.

இதுமட்டுமில்லாமல் சபோனின், ஐசோபிளாவின், மற்றும் லீக்கினேஸ் போன்ற தாவர ஊட்டச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.

இதில் உள்ள சத்துக்களின் காரணமாக இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆக செயல்படுகிறது.

இந்த பலாக்காயில் உள்ள ஐக்கலின் என்ற சத்து, நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அளித்து, அதை அதிகரிக்கவும் செய்கிறது.

இந்த பலாக்காயில் 60 சதவீதம் நீரில் கரையாத நார்சத்தும் மற்றும் பெக்டின் என்ற நீரில் கரையாத நார்ச்சத்தும் பெருமளவு உள்ளது.

பலாப்பிஞ்சு
பலாப்பிஞ்சு

பலாக்காயின் மருத்துவக்குணங்கள்

பலாக்காயில் அடங்கியுள்ள பலசத்துக்களால், நமது உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மையளிக்கிறது.

பலாக்காய் சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதால், நமது முன்னோர்கள் பெரும்பாலும் இதை உணவில் சேர்த்து வந்தனர்.

சர்க்கரை நோய்

பலாக்காயின் தித்திப்பான சுவையை கண்டு, இது சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை.

இந்த பலாக்காயில் அதிகப்படியான மாவுச்சத்து, மற்றும் நார்ச்சத்து உள்ளது என்பதை அனைவரும் அறிவீர்.

இந்த சத்துக்கள் நமது உடலில் உள்ள சர்க்கரை அளவை அதிகப்படுத்துவது இல்லை. மாறாக, சர்க்கரை அளவை குறைகிறது.

இந்த பலாக்காய் மீது மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பலாக்காய் உணவுகளை சாப்பிட்ட முப்பது நிமிடங்களில், நமது உடலில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறைகிறது என மருத்துவ ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

பலாக்காய்
பலாக்காய்

இது உண்மையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி தான்.

இது சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவாக இருக்கும் காரணத்தாலும், அதன் அறிய வகை சத்துக்கள் மக்களுக்கு பயன்படுத்தும் விதத்தாலும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம், பலாக்காய் அதிகமாக கிடைக்கும் காலங்களில் அதை பதப்படுத்தி சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது.

அதை வைத்து தொழில் தொடங்கவும் உதவி புரிந்து வருகின்றது. இதனால் பதப்படுத்தப்பட்ட பலாக்காய் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

மலச்சிக்கல்

நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பலாக்காயில் உள்ள அதிகபடியான நார்சத்து மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பலாப்பழத்தையும், அதன் காய்களை கொண்டு உணவு சமைத்து சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வையுங்கள்.

பலாக்காய்
பலாக்காய்

உடல்பருமன், இரத்த அழுத்தம்

இந்த பலாக்காய் சாப்பிடுவதால், நமது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைந்து உடல் பருமனையும் குறைகிறது.

அதுமட்டுமில்லாமல் இதனால் நமது உடலில் இரத்த அழுத்தமும் குறைகிறது.

நமது உடலில் உள்ள பித்தத்தை குறைத்து, அதை கட்டுக்குள் வைக்கிறது.

ஆண்மையும், பெண்மையும்

இந்த பலாக்காயை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஆண்மையும், பெண்களுக்கு தாய்ப்பாலையும் அதிகரிக்க செய்யும் தன்மைக்கொண்டது.

இதனை சிறப்பித்து நமது நாட்டில் சித்தர்களின் மருத்துவப்பாடலில் "தாகம்போம் வந்த பித்தஞ் சாந்தமாம் ஆடவர்க்கும் போகம் மிகப் பொழியும் பொய்யன்றோ" அதனை சிறப்பித்துள்ளனர்.

முடிவுரை

இனி ஒருபொழுதும் பலாக்காயை பயன்படுத்த மறக்காமல், நம்முடைய வரலாறுடன் பலாக்காயையும் சுவைத்து மகிழுங்கள்.

Post a Comment

0 Comments