Ticker

6/recent/ticker-posts

தூயமல்லி அரிசியின் பயன்கள் | Thuyamalli rice benefits in tamil

நெற்கதிர்கள் (thuyamalli rice)
நெற்கதிர்கள்

Thuyamalli Rice Benefits in Tamil

இன்றைய காலக்கட்டத்தில், நாக்கிற்கு அடிமையாக இருந்த, பெரும்பாலான மக்கள், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற நிலைக்கு மாறியுள்ளனர். இது உண்மையில் மகிழ்வுற வேண்டிய தருணம்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய, பல்வேறு சிறப்புக்கள் நிறைந்த, பாரம்பரிய அரிசியில் ஒன்றான தூயமல்லி அரிசியைப்பற்றி, இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • பாரம்பரிய அரிசி
  • தூயமல்லி அரிசி
  • தூயமல்லி அரிசியின் தன்மை
  • தூயமல்லி அரிசியின் பெயர்க்காரணம்
  • தூயமல்லி அரிசியில் உள்ள சத்துக்கள்
  • தூயமல்லி அரிசியின் பயன்கள்


பாரம்பரிய அரிசி

இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் அனைவருக்கும் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்கின்ற ஆசை அனைவரிடமும் உள்ளது.

இன்று நாம் பெரும்பாலும், உட்கொள்ளும் அரிசி வகைகள் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. இவற்றைப்பார்த்து உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பழுப்பு, சிவப்பு மற்றும் கருப்பு வண்ண அரிசிகளை சாப்பிட தயங்குகிறோம்.

தற்பொழுது, நாம் உண்ணும் பெரும்பாலான அரிசி வகைகள் மரபணுமாற்றத்தால் விளைவிக்கப்பட்டவை ஆகும். இதை உட்கொள்ளும் மக்கள் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால், நமது முன்னோர்கள் உட்கொண்ட பாரம்பரிய அரிசிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஒவ்வொரு அரிசி வகைகளுக்கும், தனித்தனி மருத்துவக்குணங்கள் உண்டு.

நமது பாரம்பரிய அரிசிகளில், பல்வேறு வகைகள் உண்டு. அனைத்திற்கும், தனித்தனி சிறப்பியல்புகளும் உண்டு.

நெற்கதிர் (parampariya arisi)
நெற்கதிர்

தூயமல்லி அரிசி

அன்றையக்காலத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிட்ட ஒரு அரிசி என்றால், அது தூயமல்லி அரிசி (Thuyamalli Rice) தான். சுவையிலும், சத்துக்களிலும் குறைவில்லாத ஒன்று.

பார்ப்பதற்கு பளப்பளப்பாகவும், வெண்மையாகவும் இருக்கும். இதனால், பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவர்.

தூயமல்லி அரிசியின் தன்மை

நமது பாரம்பரிய நெல்லான தூயமல்லி அரிசி, 135 நாட்களில் இருந்து, 140 நாட்களுக்குள் விளைச்சலை கொடுக்கக்கூடியது.

தூயமல்லி அரிசி பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மைக்கொண்டதால், இந்த நெல் இரகத்திற்கு பூச்சிக்கொல்லி என்ற ஒன்று தேவைப்படுவதில்லை.

அன்றைய குறுநில மன்னர்கள், இந்த அரிசியை விரும்பி உண்டனர். உழவர்களை, இந்த அரிசியை பயிர்ச்செய்ய ஊக்கப்படுத்தி போட்டிகளையும் நடத்தினர். இந்த தூயமல்லி அரிசி, அத்தனை சிறப்புகள் நிறைந்தது.

தூயமல்லியின் அரிசியின் நீராகாரமானது, இளநீரை போன்ற சுவையைக்கொண்டது.

நெல்வயல்
நெல்வயல்

தூயமல்லி அரிசியின் பெயர்க்காரணம்

தமிழரின் பாரம்பரிய அரிசியில் ஒன்றான, தூயமல்லி அரிசியின் பெயர்க்காரணத்தை அறிந்தால் வியப்படைவீர்கள். அவ்வளவு சுவாரசியமான, அழகு நிறைந்தது.

தூயமல்லி அரிசி கதிர்விடும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகையின் மொட்டுக்களை போல காட்சியளிக்கும். இதன் காரணமாகவே, நமது முன்னோர்கள், இந்த அரிசிக்கு தூயமல்லி அரிசி எனப்பெயர் சூட்டியுள்ளனர்.

தூயமல்லி அரிசியில் உள்ள சத்துக்கள்

தூயமல்லி அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்களால், தூயமல்லி அரிசி உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது.

  • இரும்புச்சத்து,
  • மாவுச்சத்து,
  • புரதம்,
  • சுண்ணாம்பு சத்து,
  • வைட்டமின் ஏ, பி, பி12, கே மற்றும் இ.

தூயமல்லி அரிசியின் பயன்கள்

நமது பாரம்பரியமான தூயமல்லி அரிசி பல்வேறு பயன்களை வாரி வழங்கக்கூடியது. இதை உணவாக எடுத்துக்கொள்ளும் பொழுது ஆரோக்கியமாக நீண்டக்காலங்கள் வாழலாம்.

நெல்
நெல்

இரத்தம்

நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது, இரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது தான்.

தூயமல்லி அரிசியை சாதமாக எடுத்துக்கொள்ளும் பொழுது, உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் பல்வேறு நோய்கள் நம்மை அண்டாது.

அதுமற்றுமின்றி, இதை சாப்பிடும் பொழுது உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

ஜீரணம்

சிலருக்கு சாப்பிடும் உணவுகள் சரியாக செரிக்காமல், அதனால் பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு ஆளாகி கஷ்டப்படுவார்கள்.

அவர்களுக்கு, இந்த தூயமல்லி அரிசி மிகவும் ஏற்றது.

அதாவது, தூயமல்லி அரிசி விரைவில் ஜீரணமடையும் தன்மைக்கொண்டது. இதனால் ஜீரணத்தில் எவ்விதமான இடையூறும் ஏற்படாது.

நெல்
நெல்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும், தான் சாப்பிடும் உணவுகளை கவனித்து சாப்பிட வேண்டும். இவர்கள் சாதத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஆனால், தூயமல்லி அரிசியை உணவாகா எடுத்துக்கொள்ளும் பொழுது, அவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவானது அதிகரிப்பதில்லை.

அதனால், இந்த அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற ஒன்றாகும்.

வாதம், பித்தம் மற்றும் கபம்

சிலருக்கு உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் ஆனது சரியான அளவில் இருக்காது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி தவிப்பார்கள்.

தூயமல்லி அரிசி, நமது உடலை வாதம், பித்தம் மற்றும் கபத்தை சரியான அளவில் கட்டுக்குள் வைத்திருக்கும். பித்தத்தால் ஏற்படும் வாந்தியை நிறுத்தும் தன்மைக்கொண்டது.

நெற்கதிர்கள்
நெற்கதிர்கள்

உடல் வலிமை

நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று வலிமை தான். எவ்விதமான சூழல்களையும் தாங்கி வாழ, உடல் வலிமை மிக முக்கியம்.

தூயமல்லி அரிசி, நமது உடலில் உள்ள அனைத்து உள்உறுப்புகளையும் வலுவடைய செய்யும் தன்மைக்கொண்டது. இதனால், நமது உடலானது வலுவாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பல்வேறு நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க மிகமுக்கிய காரணம், இந்த னாய் எதிர்ப்பு சக்தி தான். 

இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது, நமது உடலில் உண்டாகும் நோய்களை விரட்டுவது மட்டுமல்லாது, மேலும் நோய்கள் வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.

நெற்கதிர்
நெற்கதிர்

கால்நடை

தூயமல்லி அரிசி மட்டுமல்லாமல், இதன் தவிட்டிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை கால்நடைகளுக்கு உணவாக அளிக்கும் பொழுது, கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதுமற்றுமின்றி, கால்நடைகளில் இருந்து பெறப்படும் பாலின் அளவும் அதிகரிக்கும். பாலின் தரமும் மேம்படும்.

முடிவுரை

இவ்வளவு சிறப்புகளை கொண்ட, நமது பாரம்பரிய அரிசியை உட்கொண்டதால் தான், நமது முன்னோர்கள் நோய்களின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர்.

நீங்களும், பாரம்பரிய நெல் இரகங்களில் குறிப்பிடத்தக்க தூயமல்லி அரிசியை உண்டு பயன்பெறுங்கள்.

Post a Comment

0 Comments