Ticker

6/recent/ticker-posts

நெல்லிக்கனியின் நன்மைகள் | ஆரோக்கியம்

நெல்லிக்கனி
நெல்லிக்கனி

Benefits of Gooseberry | Health

நமது இந்திய திருநாடனது பல்வேறு அதிசயங்களை தன்னகத்தில் கொண்டுள்ளது என அனைவரும் அறிந்ததே!.

நமது நாட்டின் தட்வெப்பநிலையால் பல்வேறு வகையான மூலிகைகள், காய்கள் மற்றும் கனிகள் என தரக்கூடிய ஏனைய பலமரங்களை கொண்டுள்ளது.

நமது நாட்டில், விளையும் அனைத்து விதமான காய்கள் மற்றும் கனிகளை, அது விளையும் பருவத்தில் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க செய்கிறது.

நமது நாட்டில் விளையும், மிகவும் பயனளிக்க வல்ல அற்புதமான நெல்லிக்கனியை பற்றி பாப்போம்.

பொருளடக்கம்

  • நெல்லிக்கனி
  • நெல்லிக்கனியும், தமிழும்
  • நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்
  • நெல்லிக்கனியின் மருத்துவக்குணங்கள்


நெல்லிக்கனி

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள்.

ஆனால் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும், மூன்று ஆப்பிள் சாப்பிட்டதற்கு சமம்.

நெல்லிக்காய் ஆனது நமது நாட்டினை சார்ந்தது. இது ஒரு மரவகையை சார்ந்தது.

நெல்லிக்காய்களில் பலவகைகள் உண்டு. அதில் நாம் இன்று பார்க்கக்கூடிய நெல்லியானது அனைவரும் அறிந்ததே!.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

இந்த நெல்லிக்காயானது பச்சை மற்றும் இளம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும்.

இது உலர்ந்ததும் கருப்பு வண்ணத்தில் இருக்கும். உலர்ந்த இந்த நெல்லியை நெல்லி முள்ளி என்றும் அழைக்கின்றனர்.

நெல்லிக்காய் ஒரு சிறந்த காயகற்ப மூலிகை ஆகும். இந்த நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு மூப்பு என்பது இல்லாமல் போய்விடும்.

அதாவது வயதானாலும், அவர்கள் வயதான தோற்றத்தை அடைய மாட்டார்கள்.

இந்த நெல்லிக்கனியில் உப்பு சுவையை தவிர்த்து, மற்ற அனைத்து சுவைகளையும் தன்னகத்தில் கொண்டுள்ளது.


நெல்லிக்கனியும், தமிழும்

நமது தமிழ் இலக்கியங்களில் இந்த நெல்லிக்காய் இடம்பெற்றிப்பது சிலர் அறிந்ததே.

நமது நாட்டில் ஒளவையர் பற்றி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அப்படி அறியவில்லை என்றால் அவர்கள் நமது நாட்டினை சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை.

அவ்வளவு சிறப்புமிக்க ஒளவையருக்கு, நீண்ட ஆயுட்காலத்தை தரக்கூடிய நெல்லிக்கனியை கடையெழுவள்ளல்களில் ஒருவரான அதியமான் கொடுத்தது அனைவரும் அறிந்ததே!.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்


நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்

நெல்லிக்கனியில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் அடிக்கடி நெல்லிக்காயை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

      • புரதச்சத்து,
      • மாவுச்சத்து,
      • இரும்புச்சத்து,
      • சுண்ணாம்புச்சத்து,
      • பாஸ்பரஸ்,
      • கால்சியம்,
      • கொழுப்பு,
      • நியாசின்,
      • வைட்டமின் பி1, சி,
      • தாதுப்பொருட்கள்,
      • 60 வகையான கலோரிகள்.

மற்ற எந்தவொரு காய்களிலும், இல்லாத அளவிற்கு ஒரு நெல்லிக்காயில் அதிகப்படியான வைட்டமின் சி உள்ளது.

அதாவது முப்பது தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவிற்கு உள்ளது.


நெல்லிக்கனியின் மருத்துவக்குணங்கள்

நமது நாட்டில் தொன்றுத்தொட்டு இருக்கக்கூடிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களிலும், இந்த நெல்லிக்கனியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இளமை

இந்த நெல்லிக்கனியை சாப்பிடுவதால் நமது செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, இரத்தவோட்டம் அதிகரித்து தோலானது சுருங்குவதை தடுக்கிறது.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

அதுமட்டுமல்லாமல் நமது சருமத்தை பொலிவுடன் இருக்கச்செய்கிறது மற்றும் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் இடமிருந்தும் நம்மை காத்து, நமது இளமை பருவத்தை நீடிக்க செய்கிறது.

கண்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதினால், நமது கண்கள் பலப்படுகின்றன.

இதனால் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமலும், வந்த நோய்கள் விரைவில் சரியாகவும் செய்கின்றன.

வயது முதிர்வால் ஏற்படக்கூடிய கண் சம்மந்தமான நோய்களும் வராமல் தடுக்கிறது.

முடி

ஏனைய பலருக்கு தெரிந்த மற்றும் பயன்படுத்த காரணமாக அமைவது இந்த நெல்லிக்கனியை சாப்பிடுவதனால் முடியானது பலமடைந்து, உதிர்வதை முற்றிலும் தடுக்கிறது என்பதாலேயே!. அது உண்மை தான்.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ முடியின் வேர்களை பலப்படுத்துவது மாற்றுமல்லாமல் புதிதாக முடிகளை வளரவும் செய்கிறது.

இதனால் முடி உதிர்வது குறைந்து, வளரவும் தொடங்குகிறது.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

புற்றுநோய்

உலகில் அதிகமாக மக்கள் பயப்படக்கூடிய ஒரு நோயென்றால் அது புற்றுநோய் தான்.

இந்த நோய் வந்தால் முற்றிலும் சரியாவதில்லை, மாறாக அது குறைய மற்றுமே செய்கிறது.

ஆனால் இந்த நெல்லிக்காயை, நாம் சாப்பிடும் பொழுது நமது நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கிறது.

அதுமற்றுமின்றி இந்த நெல்லிக்காய் வைரஸ்களிடமிருந்தும், புற்றுநோயை உண்டாக்க கூடிய கிருமிகளிடம் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

இதை சாப்பிடும் எவருக்கும் புற்றுநோயானது வருவதில்லை என்பது தான் உண்மை.

இரத்தம்

இந்த நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது, இரத்தமானது சுத்திகரிக்கப்படுகிறது.

இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது, உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

ஆஸ்துமா

அடிக்கடி நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து குடித்துவர ஆஸ்துமா நோயானது முற்றிலும் குணமாகும்.

உடல்பருமன்

தினமும் எழுந்ததும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை குடிக்க, நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல்பருமனையும் குறைகிறது.

எலும்புகள்

நமது உடல் வலிமையுடன் காட்சியளிக்க காரணமாவது நம்முடைய எலும்புகள் தான்.

இந்த நெல்லிக்காயில் உள்ள அதிகப்படியான கால்சியம், நமது எலும்புகளை பலமடைய செய்கிறது.

இதனால் முதுமையிலும் ஆரோக்கியமாக நம்மால் இருக்கமுடியும்.

முகப்பரு

இந்த நெல்லிக்காயை முகப்பரு உள்ளவர்கள் சாப்பிட்டு வர முகப்பருவனது மறைந்து, பொலிவுடன் காட்சியளிக்கும். மேலும் வராமல் தடுக்கவும் செய்கின்றன.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

நினைவாற்றல்

நமது உடலில் இரத்தத்தின் அளவு குறைவதினால் ஏற்படக்கூடிய மறதியை போக்க, இந்த நெல்லிக்காய் உதவுகிறது.

இதனை சாப்பிடுவதினால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து நினைவாற்றலையும் பெருக செய்யும் தன்மை கொண்டது.

மாதவிடாய்

மாதவிடாய் குறைபாடு உள்ள பெண்கள் இந்த நெல்லிக்காயை தினமும் காலைவேளையில் வாழைப்பழத்துடன் சாப்பிட்டு வர சரியாகும்.

உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடல் வெப்பம்

இந்த நெல்லிக்கனியை ஜூஸ் செய்து குடித்து வர உடல் வெப்பமானது குறைந்து ஆரோக்கியமாக இருக்கும்.

அதுபோல உடல் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சிறுநீரக பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.

முடிவுரை

இதுப்போல நெல்லிக்கனியின் பல்வேறு நன்மைகளை சொல்லிக்கொண்டே செல்லலாம். இந்த நெல்லிக்கனி அவ்வளவு நன்மைகளை கொண்டது.

ஆகையால், இந்த நெல்லிக்கனியை தவறாது வாரத்தில் ஒரு முறையேனும் எடுத்துக்கொள்ளுங்கள். உடலையும், மனதையும், ஆரோக்கியமாக என்றும், இளமையாக வையுங்கள்.

Post a Comment

0 Comments