விக்ரமாதித்தன் கதைகள் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 7
பதுமையானது, மன்னன் போஜராஜனை பார்த்து தன்னுடைய இரண்டாவது கதையை கூறத்தொடங்கியது.
பர்வதபுரம் என்ற ஊரில் அன்பே வடிவமாக ஒரு அண்ணன், தங்கை இருந்தனர். அவர்களுக்கு பெற்றோர் இல்லை. அதனால் ஒருவரை விட்டு ஒருவர் எப்பொழுதும் பிரிந்ததே இல்லை. அந்த ஊரே அவர்களது அன்பை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அந்த பர்வதபுரத்தில் புகழ்பெற்ற பார்வதி பரமேஸ்வரன் திருக்கோவில் இருந்தது. அந்த கோவிலில் இருந்த பார்வதி பரமேஸ்வரனையே இந்த அண்ணனும், தங்கையும் தனது தாய் தந்தையாக கருதி வளர்ந்து வந்தனர்.
தங்கையின் திருமண வயது நெருங்கியதும், அண்ணன் தங்கைக்கு ஒரு அன்பான நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என வரன் தேட தொடங்கினான். அப்பொழுது தான் அவனுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் தெரிந்தது.
தனது தங்கையின் ஜாதகப்படி, அவளுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்திற்க்கு, பிறகு அவளது கணவன் உயிரானது போய்விடும் என்பது தான்.
இதனை கேட்ட அண்ணனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என புரியாமல் தடுமாறினான்.
அதிர்ச்சி |
இதனால் அவனது தங்கையை யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை. அதனால் பார்வதி பரமேஸ்வரனின் திருக்கோவிலுக்கு சென்று, ஒரு வேண்டுதலை முன்வைத்தான்.
"தாயே! இதுநாள் வரையில் நானும் எனது தங்கையும் உங்களையே, எங்களது பெற்றோராக கருதி வளர்ந்து வந்தோம்.
அது உண்மையெனில், எனது தங்கையின் திருமணம் ஆனது நல்லபடியாக நடந்தாக வேண்டும். என் தங்கையின் கணவனது உயிரானது ஒரு வருடத்திற்கு பிறகு பிரியக்கூடாது.
அதற்கு பதிலாக எனது உயிரினை நான் அளிக்கின்றேன்" என்றான்.
அவளது அண்ணன் கோவிலை விட்டு வெளியில் வந்த அடுத்த கணமே, அவனது தங்கையை பெண் பார்க்க வந்து, திருமணமும் முடிவானது. இதனால் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான்.
திருமணம் சீரும், சிறப்புமாக நடைபெற்றது. தங்கையினை தனது உள்ளங்கையில் வைத்து தாங்கும் ஒரு கணவனும் கிடைத்தான்.
கணவன், மனைவி |
மாமன், மச்சான் உறவானது அன்பில் நிறைந்து காணப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு. தங்கையும், அவளது கணவனும் அண்ணனை பார்க்க பர்வதபுரத்திற்க்கு வந்தனர்.
அண்ணன் இருவரையும் சிறப்பாக கவனித்தான். அன்று இரவு தூங்கும் பொழுது, அண்ணனின் கனவில் பார்வதி தேவி தோன்றினாள்.
"அவனை பார்த்து கொடுத்த வாக்கினை மறந்து இப்படி தூங்குகிறாயே!. இது தர்மமா! " என கேட்டாள்.
தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட அண்ணன், அம்மனுக்கு கொடுத்த வாக்கினை மறந்து போய்விட்டோமே என எண்ணி நொந்து போனான்.
மறுநாள் காலைப்பொழுதில், தான் கோவிலுக்கு சென்று வருகிறேன் என தனது தங்கை மற்றும் அவளது கணவனிடம் கூற, அவர்களும் வருவோம் என கூறி அவனுடன் புறப்பட்டு சென்றனர்.
மூவரும் கோவிலுக்கு சென்று பார்வதி பரமேஸ்வரனை வணங்கிய பின்னர் வெளியில் வந்த அண்ணன், கோவிலில் தனது உடைவாளை மறந்து வைத்துவிட்டு வந்ததாகவும், அதனை எடுத்து வருகிறேன் என கூறி உள்ளே சென்றான்.
தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற வேண்டி தனது வாளினால் தனது தலையை தனியாக வெட்டிக்கொண்டு இறந்து போனான்.
நீண்ட நேரமாகியும், அண்ணன் வெளியில் வராததை கண்டு தங்கை பயந்து போக, அவளது கணவன் நான் சென்று அழைத்து வருவதாக குறி உள்ளே சென்றான்.
உள்ளே வந்தவன், தனது மச்சான் தலைவேறு, உடல்வேறாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போனான்.
உடல் |
இதனை தனது மனைவியிடம் எவ்வாறு சொல்வது என புரியாமல் அங்கிருந்த வாளினால் தனது தலையினை வெட்டிக்கொண்டு இறந்தான்.
தனது அண்ணனும், கணவனும் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததை கண்டு, பயந்துபோன தங்கை கோவிலுக்கு உள்ளே சென்றாள். எங்கு சென்றும் இருவரையும் காணாததால் அம்மனின் சந்நிதிக்கு சென்றாள்.
அங்கு இருவரும் தலைவேறு, உடல்வேறாக கிடப்பதை கண்டு அதிர்ந்துபோன அவள் தானும் இனி வாழப்போவதில்லை என முடிவெடுத்தாள். பின்னர், அங்கிருந்த வாளினை எடுத்து தனது தலையை தூண்டிக்கப்போனாள்.
அப்பொழுது பார்வதி தேவியானவள், நேரில் தோன்றி "நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பினை கண்டு வியந்துபோனேன். நீ கவலைக் கொள்ளாதே! இப்பொழுது நடந்த இந்த நிகழ்வானது முன்பே நிச்சயிக்கப்பட்டது.
ஆனால் நீங்கள் எவ்வாறு எங்களை தாய் தந்தையாக கருதினீரோ, அவ்வாறே நாங்களும் உங்களை எங்களது பிள்ளைகளாகவே கருதுகின்றோம். இதோ இந்த தண்ணீரை அவர்களின் கழுத்தில் தடவி தலையினை சேர்த்து வை.
புனித நீர் |
இரண்டு துண்டுகளாக இருக்கும் உடல் ஒன்றாக மாறும்" என்று கூறி மறைந்தாள். இதனைக்கேட்டு மகிழிச்சியடைந்த தங்கை, பதற்றத்தில் அண்ணன் உடலோடு, கணவனின் தலையையும், கணவனின் உடலோடு அண்ணனின் தலையையும் சேர்த்து வைத்து உயிர்பெற செய்தாள்.
இருவரும் உயிர் பெற்று எழுந்தனர். இருவரது உடல்களும் மாறிப்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தாள் என கதையை கூறி முடித்தது வேதாளம். விக்ரமாதித்யனை பார்த்து, என்ன மன்னா! கதையினை நன்றாக கேட்டீர்களா? என கேட்டது.
விக்ரமாதித்யன் அமைதியாக இருக்க, வேதாளம் தனது இரண்டாவது கேள்வினை கேட்க தொடங்கியது. தங்கையானவள் இப்பொழுது உடல்கள் மாறிப்போன இருவரில் யாரை கணவனாக ஏற்பாள்? என கேட்டது. பதில்கூறு இல்லையேல் தலையினை கடித்துத்தின்று விடுவேன் என்றது வேதாளம்.
அதுவரை அமைதியாக இருந்த விக்ரமாதித்யன் வேதாளத்திடம் "அவள் தனது கணவனின் தலை பொருந்திய அண்ணனின் உடலை கொண்டவனையே கணவனாக ஏற்பாள். காரணம், ஒருவரின் மூளையே, அனைத்து நினைவுகளையும் கொண்டிருக்கும்" என்றான்.
விக்ரமாதித்யன் சொன்ன பதிலை கேட்ட வேதாளம், சரியான பதிலை கூறிவிட்டாய் மன்னா!. உனது அறிவாற்றலை கண்டு வியந்தேன் என கூறி கட்டிலிருந்து விடுபட்டு, மீண்டும் முருங்கை மரத்தில் ஏற பறந்து சென்றது.
0 Comments