Ticker

6/recent/ticker-posts

பாதாம் பிசினின் நன்மைகள் | Badam pisin benefits

பாதாம் பிசின் (badam pisin)
பாதாம் பிசின்

Badam Pisin Benefits in Tamil

கோடைக்காலத்தில் ஏற்படும் மிகுதியான வெப்பத்தால், அனைவரும் வேதனையுற்று இருப்போம்.

கோடை வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து, பலர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்த பதிவு அவர்களுக்கு கட்டாயமாக பயனுள்ளதாக இருக்கும்.

பொருளடக்கம்

  • பாதாம் பிசின்
  • பாதாம் பிசினில் உள்ள சத்துக்கள்
  • பாதாம் பிசினை சாப்பிடும் முறை
  • பாதாம் பிசினின் நன்மைகள்


பாதாம் பிசின்

பாதாம் பருப்பை போலவே, பாதாம் பிசினுக்கும் பல்வேறு சத்துக்களும், பயன்களும் உண்டு.

பாதாம் மரத்திலிருந்து பெறப்படும் பிசினை பாதாம் பிசின் என்கிறோம். சாதரணமாக, பாதாம் மரத்தை கீறும் பொழுது, அதிலிருந்து ஒருவகையான திரவம் ஆனது வடியும்.

அந்த திரவம் சிறிது நேரத்தில் கட்டியான தன்மைக்கு மாறிவிடும். அவ்வாறு மாறிய பிசினை, சேகரித்து பதப்படுத்தி விற்பனை செய்வார்கள்.

இந்த பாதாம் பிசினானது இளம் மஞ்சள், அல்லது வெளிறிய பழுப்பு நிறத்தை கொண்டிருக்கும். இது ஒரு இயற்கையான குளிரூட்டி ஆகும்.

பாதாம் பிசின் (badam pisin)
பாதாம் பிசின்

பாதாம் பிசினில் உள்ள சத்துக்கள்

பாதாம் பிசினில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் குறிப்பாக,

      • புரதம்,
      • வைட்டமின்,
      • ஜிங்க்,
      • தாது உப்புக்கள்(மினரல்).

பாதாம் பிசினை சாப்பிடும் முறை

பாதாம் பிசினை சிறிதளவு எடுத்து சுத்தமான தண்ணீரில் சுமார் 8 மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். 

இவ்வாறு செய்யும் பொழுது கடினமாக இருந்த பாதாம் பிசினானது, மிருதுவான ஜெல்லி போன்று மாறிவிடும்.

பின்னர், உங்களுக்கு விருப்பமான குளிர்பானத்திலோ, அல்லது பாலிலோ கலந்து குடிக்கலாம்.

பாதாம் பிசினை ஐஸ்கிரீம், மருந்து, இனிப்பு, குளிர்பானம் மற்றும் ஜிகர்தண்டா ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர்.

பாதாம் பிசின் (badam pisin in tamil)
பாதாம் பிசின்

பாதாம் பிசினின் நன்மைகள்

பாதாம் பிசின் பல்வேறு விதங்களில் மனிதனுக்கு நன்மை அளிக்கிறது. இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

உடல் சூடு

கோடைக்காலத்தில் பலர் உடல் சூட்டால் அவதியுற்று வருவார்கள். அவர்களுக்கு, இந்த பாதாம் பிசின் அருமருந்தாகும். 

சாதாரணமாகவே, சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். அவர்கள், இந்த பாதாம் பிசினை உட்கொள்ளும் பொழுது உடல் சூடு குறைய தொடங்கும்.

இதை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பொழுது உடல் சூடு குறைந்து, உடல் சூட்டால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

மகப்பேறு

பெண்களின் பிரசவத்திற்கு பிறகு, அவர்களது உடலில் குறைந்த ஊட்டச்சத்துக்களை மீட்டுயெடுக்க பாதாம் பிசின் கலந்த உணவு அல்லது மருந்து பொருட்கள் தரப்படுகிறது.

இதனால் பெண்கள் மகப்பேறுக்கு முன்பு இருந்த நிலையை எளிதில் அடைவதற்கு பாதாம் பிசின் உதவுகிறது.

பாதாம் பிசினானது உண்மையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த உணவுப்பொருளாகும்.

மகப்பேறு
மகப்பேறு

வெள்ளைப்படுத்தல்

பெண்களின் உடல் சூட்டின் காரணமாக வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. அவர்கள் இந்த பாதாம் பிசினை எடுத்துக்கொள்ளும் பொழுது, உடல் சூடு குறைந்து வெள்ளைப்படுதல் முற்றிலும் சரியாகும்.

உடல் எடை அதிகரிக்க

பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க காரணம், அவர்களுடைய உடல் சூடாகும். பாதாம் பிசினை எடுத்துக்கொள்வதால் உடல் சூடு குறைய தொடங்கும்.

அதுமற்றுமின்றி, பாதாம் பிசினில் உள்ள அதிகப்படியான புரதச்சத்தானது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர், கொழுப்பு நிறைந்த பாலில், சர்க்கரை மற்றும் பாதாம் பிசினை, தினசரி ஒன்று அல்லது இரண்டு வேளைகளில், உணவு எடுத்துக்கொண்ட பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்.

Weight Gain
Weight Gain

நோய்எதிர்ப்பு சக்தி

பாதாம் பிசினானது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. இதை எடுத்துக்கொள்ளும் பொழுது, மனச்சோர்வு, பதட்டம், மற்றும் பலவீனம் சரியாகும்.

நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பல்வேறு நோய்கள் நம்மை அண்டாமல் காக்கும்.

உடல் வலிமை

பாதாம் பிசினானது உடல் தசைகளை வலிமையாக்க வல்லது. அதுமற்றுமின்றி, தசைநார்கள், எலும்புகள் என அனைத்தையும் வலிமைக்கும் ஆற்றல் கொண்டது.

ஆகையால் உடற்பயிற்சியில் ஈடுபடுவோர்கள் பாதாம் பிசினை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதனால் அவர்களுடைய உடலானது வலுவடைந்து, அழகான உடலமைப்பையும் பெறுகிறார்கள்.

உடல் வலிமை
உடல் வலிமை

ஆண்மை அதிகரிக்க

இன்றைய தலைமுறையினரின் தவறான உணவு பழக்கத்தால் மலட்டு தன்மை அதிகரித்து, ஆண்மை குறைபாட்டால் தவித்து வருகின்றனர்.

பாதாம் பிசினில் அதிகப்படியான ஜிங்க் உள்ளதால், டெஸ்டோஸ்டிரான் அளவை அதிகரிக்கும். இது ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும் தன்மைக்கொண்டது.

அதுமற்றுமின்றி, விந்தணுக்களின் குறைப்பாட்டையும் நீக்க வல்லது. ஆகையால், பாதம் பிசினானது ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

சருமம் மேம்பட

பாதாம் பிசினில், நமது தோலுக்கு தேவையான பல்வேறு தாது உப்புகள் நிறைந்துள்ளது. இதை நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பொழுது, நமது சருமம் மேம்படும்.

தோலின் பொலிவானது அதிகரிக்க செய்யும்.

சருமம்
சருமம்

உடல் நலம்

பாதாம் பிசினை வாரத்தில் மூன்று முறைகள் எடுத்துக்கொள்ளும் பொழுது, உடல் சோர்வு நீங்கி உடல் வலிமை அடையும்.

சிறுநீரக பிரச்சனைகள்

பாதாம் பிசினை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பொழுது, உடல் சூடானது கட்டுக்குள் வரும். இதனால், சிறுநீரகத்தில் உடல் சூட்டால் ஏற்படக்கூடிய நீர் கடுப்பு, சிறுநீர் பை அடைப்பு மாற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

புண்கள் குணமாக

தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் விரைவில் ஆறாமல், தீராத வலிகளை ஏற்படுத்தும்.

பாதாம் பிசினை குழைத்து புண்களின் மீது பூசி வர விரைவில் குணமாகும்.

பாதம் பிசினை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது இரைப்பை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தேவையான அளவு மட்டும் எடுத்து பயன்பெறுங்கள்.

முடிவுரை

ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடிய பாதாம் பிசினை அடிக்கடி உணவில் எடுத்து நன்மை பெறுங்கள்.

Post a Comment

0 Comments